ஐபோன் எக்ஸ் மற்றும் 13இன்ச் மேக்புக் ப்ரோவுக்கு இலவச சேவை – ஆப்பிள் அறிவிப்பு:

  • by Mithramohana Manjula
  • November 14, 2018

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஐபோன் எக்ஸ் திரையை தொட்டதும் செயல்படுவதில்லை. சில சமயங்களில் இடைவெளி விட்டு செயல்படுவதாக தெரிவித்தார்.

ஐபோன் எக்ஸ் கடந்த நவம்பர் மாதம் விற்பனைக்கு வந்தது. ஐபோன் எக்ஸ்.எஸ் (ரூ.99,900) மற்றும் ஐபோன் எக்ஸ். ஆர் (ரூ.76,799) செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வந்ததும் ஐபோன் எக்ஸின் விற்பனை செய்யப்படவில்லை.

ஆப்பிள் நிறுவனம் கூறுகையில், ஒருசில 13இன்ச் மேக்புக் ப்ரோவில், சேகரிக்கப்பட்ட தகவல் இழப்பு மற்றும் இயக்ககத்தில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 128 ஜிகா பைட் அல்லது 256 ஜிபி சேமிப்பு கடந்த ஜூன் 2017 லிருந்து ஜூன் 2018 வரை விற்பனை செய்யப்பட்டது. அப்போது வாடிக்கையாளர் வாங்கிய மடிக்கணினிகள் விரைவில் சேவை செய்து கொடுக்கப்படுமென்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேக்புக் ப்ரோ இலவசமாக சரிபார்க்கப்படும் போது ஐபோன் எக்ஸில் பழுதடைந்த போன்களுக்கு இலவச திரை மாற்று செய்து கொடுப்படுமென்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

முதலில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ் திரையில் ஏற்பட்டுள்ள பழுதிற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதற்கு முந்தைய ஐபோன் மாடல்களில் திரை பழுது குறித்து பிரச்சனைகள் வந்தபோது இதே இலவச திரை மாற்றினை மட்டும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *